ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத வருமானத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூபாய் 15 கோடி மதிப்பிலான நான்கு அசையா சொத்துகளுக்கு முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரத்கம, தேவினிகொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு, காலி நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்ததையடுத்து, மேலதிக விசாரணைக்காக வழக்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு (Illegal Assets Investigation Division) மாற்றப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரும் அவரது மனைவியின் சகோதரரும் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, சந்தேகநபரின் மாமியாரின் பெயரில் குறித்த சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் வருமாறு:
*13.72 பேர்ச்சஸ் பரப்பளவிலான காணியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடம் – மதிப்பு ரூ. 6 கோடி.
*9.10 பேர்ச்சஸ் காணியில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் – மதிப்பு ரூ. 4 கோடியே 50 இலட்சம்.
*12.33 பேர்ச்சஸ் காணி – மதிப்பு ரூ. 2 கோடியே 50 இலட்சம்.
*9.88 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள ஒரு மாடி வீடு – மதிப்பு ரூ. 2 கோடி.
மேற்கண்ட நான்கு சொத்துகளின் மொத்த மதிப்பு ரூபாய் 15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ், 2026 ஜூலை 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏழு நாட்களுக்கு குறித்த சொத்துகளுக்கு முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.










.jpg)


.jpg)
