நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றபோது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மது அருந்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார் என சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், "அப்போது என்ன நடக்கிறது என்பது அமைச்சருக்குத் தெரியவில்லை. 2029ஆம் ஆண்டிலும் நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன். அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை சிறைக்கு அனுப்புவதை உறுதி செய்வேன்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, "நீதி அமைச்சர் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விடயம். அமைச்சர் குடித்த பானத்தில் இவர்கள் சோடா கலந்தது போல சில எம்.பி.க்கள் பேசுகின்றனர். சிறைச்சாலை மோதல் சம்பவத்திற்குப் பிறகு அமைச்சர் தனது கடமைகளை முறையாக நிறைவேற்றினார். பாதிக்கப்பட்டவர்களுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார்" என்று கூறினார்.

.jpg)

.jpg)