
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தங்களது வீடுகள் மற்றும் வளாகங்களைப் பாராமரித்து வந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட ஒரு தொகுதியினருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால் 21 இலட்சம் ரூபா (2.1 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் டெங்கு குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதத் தொகை இதுவென மகரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நலின் கல்தேரா தெரிவித்துள்ளார்.
மகரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் சுற்றாடல் வளாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, டெங்கு நுளம்புகள் மற்றும் அவற்றின் லார்வாக்கள் பெருகும் வகையில் அபாயகரமாக வளாகங்களைப் பராமரித்த நபர்களுக்கு எதிராகவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாட்களிலும் இந்த டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தங்களது வீடுகளையும் அதனைச் சுற்றியுள்ள சுற்றாடலையும் தூய்மையாகப் பராமரிக்குமாறு மகரகம நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நலின் கல்தேரா பிரதேச மக்களுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.




.jpg)







.jpg)
