இலங்கை கடற்படையினரும் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (14) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் கோட்டாபய' முகாமிற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேகநபரையும் சட்டவிரோத மதுபானத் தொகையையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.






.jpg)







