
அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற “சிசு செரிய” (Sisu Seriya) பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் பயணித்துள்ளதுடன், மோதிய வேகத்தில் இரு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அனுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





.jpg)







