
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (13) தொம்பே, பரங்கொடை பகுதியில் விசேட சோதனை ஒன்று நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது 9 கிலோகிராம் மற்றும் 128 கிராம் எடையுடைய கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் எனப்படும் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டது.
போதைப்பொருளுடன், அந்த இடத்திலிருந்து 3 மனித எதிர்ப்புப் கண்ணிவெடிகள் , 3 பியூஸ்கள் (Fuses), 20 எம்16 (M16) ரகத் தோட்டாக்கள், 5 வாள்கள், ஒரு இலத்திரனியல் தராசு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியனவும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் தற்பொழுது விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)








