மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரிவில் 'சமுர்த்தி ரன் விமன ' மூன்று வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு


(வவுணதீவு நிருபர்)


மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி ரன் விமன வீடமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று குடும்பங்களுக்கான புதிய வீடுகள் புதன் கிழமை (15) உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

சமுர்த்தி பிரதேச முகாமைத்துவப் பணிப்பாளர் கே. தங்கத்துரை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி தி. ஜெயானந்தி, பிரதேச செயலாளர் திருமதி ந. சத்தியானந்தி ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்து உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

குறிஞ்சாமுனை , காந்திநகர், காஞ்சிரங்குடா ஆகிய கிராமங்களில் இருந்து கடந்த பல வருடங்களாக குடிசையில் வாழ்ந்து வந்த மூன்று குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒரு வீட்டுக்கு 10 இலட்சம் ரூபா வீதம் 30 இலட்சம் ரூபாய் மூன்று வீடுகளுக்கும் சமுர்த்தி திணைக்களத்தினால் நிதி வழங்கப்பட்டு உரிய பயனாளிகளின் பங்களிப்புடன் இவ் வீடு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.