
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மேலும் இரு சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த அதிகாரிகளான பசிந்து மதுசர மற்றும் பி.டி.எஸ்.எல். குணவர்தன ஆகியோரின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சக சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்களுக்கு இறுதி அஞ்சலியும் கௌரவ மரியாதையும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரி பசிந்து ரணவீரவின் உடல் லுணுகம்வெஹேரவில் உள்ள அவரது இல்லத்திற்கும், அதிகாரி சந்திக லசான் குணவர்தனவின் உடல் அம்பலாந்தோட்டை, மல்பேத்தாவ ரொட்டவலவில் உள்ள அவரது இல்லத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. இந்த இறுதி நிகழ்வில் பிரதி அமைச்சர் ருவன் செனரத் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், உடல்கள் மீதான இறுதிச் சடங்குகள் நாளை (17) நடைபெறவுள்ளன.






.jpg)






