தலைமன்னாரில் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான ஷாம்பு பொட்டலங்கள் பறிமுதல் !




தலைமன்னார் உருமலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 ஷாம்பு பொட்டலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் SLNS தம்மன்னா கப்பலின் கடற்படையினர், கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜூலை 13 ஆம் திகதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட ஷாம்பு பொட்டலங்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.