சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை பெற முடியாது: தூதரகம் அறிவிப்பு


 லித்துவேனிவில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களிடம் பெருமளவிலான பணத்தைக் கொள்ளையடிக்கும் மோசடி வலைப்பின்னல்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கையிலுள்ள லித்துவேனி தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தூதரகம் இன்று (16) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவுக்குச் சென்று அங்கு எந்தவொரு சட்டப்பூர்வமான வேலை வாய்ப்பையும் பெற முடியாது. இவ்வாறான போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்யுமாறு கோருபவர்கள் இந்த மோசடிக் கும்பலின் தரகர்களாகவே இருக்க முடியும்.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கையர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்கள் ஊடாக மட்டுமே தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு தரப்பினருக்கும் பணத்தைச் செலுத்துவதற்கு முன்னர் உத்தியோகபூர்வ வழிகள் மூலம் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.