.jpg)
இந்தியாவின் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பூ சுந்தர், Avni Cinemax (P) Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, இலங்கையின் சென்னை துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கீதீஸ்வரனை சந்தித்து "Maharanis – Tinsel Queens" திரைப்படத் திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த திரைப்படத் திட்டத்தின் மூலம் இலங்கையின் வளமான பண்பாட்டு மரபு, வரலாற்றுச் சிறப்பு மற்றும் இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலங்களை சர்வதேச ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் போது, இந்த திரைப்படம் இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரத்தை உலகளவில் பிரபலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன், திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் பண்பாட்டு சுற்றுலாவுக்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கையை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக சென்னை இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.













