அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்ற விசாரணைகளை இவ்வாறு நிகழ்நிலையில் நடத்துவதற்கு உரிய நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய திங்கட்கிழமை (14) முதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளை, அவர்களின் வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் நீதிமன்றங்களில் நேரில் ஆஜர்படுத்துவதில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குப் பாரிய நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டே, நிகல்நிலை ஊடாக இந்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போதும் சுமார் 600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் விரைவில் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது அங்கு ஏற்பட்டுள்ள சொத்து உள்ளிட்ட சேத விபரங்களை முழுமையாக மதிப்பீடு செய்வதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் இதற்கென விசேட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.





.jpg)








