செவ்வாய்க்கிழமை (08) ஊடகங்களை சந்தித்து எஸ்.ஆர்.டி.எம்.சேனாநாயக்க மேலும் தெரிவித்ததாவது,
புகையிரத பொதுமுகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாக நடவடிக்கைகளால் புகையிரத சேவையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், இதனால் பயணிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய புகையிரத பொதுமுகாமையாளரை பதவியிலிருந்து நீக்குதல் மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்க செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை மீளப்பெறுதல் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க உள்ளோம்.
எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி நள்ளிரவுக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிட்டால் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.





.jpg)




.webp)


