"பத்தல ஹீன்பாசி" என அழைக்கப்படும் ஜெயசிங்க ஆராச்சிகே ஹேமந்த ஹேமந்த எனும் கஞ்சா கடத்தல்காரர் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸ் தலைமையகத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் தம்புத்தேகம, கிராவல்வத்தை மற்றும் மிதெனிய ஆகிய பகுதிகளில் வாங்கப்பட்ட காணிகள், கட்டிடங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட 8 சொத்துக்கள் இரண்டு வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் இரண்டாவது மகனின் பெயரில் 35 மில்லியன் ரூபா பெறுமதியில் வாங்கப்பட்ட சொகுசு ஜீப் வண்டி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மகனுக்கு எதிராக ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், இச் சொகுசு வாகனம் சட்டவிரோதப் பணத்தின் மூலமே வாங்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், குறித்த ஜீப் வண்டியும் இன்றிலிருந்து புதன்கிழமை (16) நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












.jpg)