2025 (2026) க.பொ.த. சாதாரண தர மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு
இலங்கை பரீட்சைத் திணைக்களம் 2025 (2026) க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை சனிக்கிழமை (26) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
மீள் பரிசீலனைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ பரீட்சை இணையதளங்கள் ஊடாக தங்களது புதுப்பிக்கப்பட்ட பெறுபேறுகளைப் பார்வையிடலாம்.
பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளைப் பார்ப்பதற்குத் தங்களது பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட வேண்டும்.
மீள் பரிசீலனை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விசரணை அல்லது தெளிவுபடுத்தல்களுக்கு, பரீட்சைத் திணைக்களத்தின் தபால் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையை பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்:
அவசர அழைப்பு : 1911
நேரடி எண்கள்: 011 278 4208, 011 278 4537, 011 278 5922
தொலைநகல் : 011 278 4422


.jpg)

.jpg)





.jpg)
.jpg)

