உன்னிச்சை 6 ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை 6 ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள், 2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 82% சித்தி சதவீதத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

அண்மையில் வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 02 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு, 07 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும், 18 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இப்பாடசாலையின் மிக உயர் புள்ளியாக 142 புள்ளிகளும், குறைந்த புள்ளியாக 49 புள்ளிகளும் பதிவாகியுள்ளன. இவ்வாறான சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 02 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு, 07 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும், 18 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளனர்.