ஒரு போட்டோகொப்பிக்கு ரூ.850 அறவிட்டதாக குற்றச்சாட்டு – புத்தளத்தில் கடை மீது திடீர் சோதனை



புத்தளம் மாவட்டத்தில் ஒரு போட்டோகொப்பிக்கு 850 ரூபாய் அறவிட்டதாகக் கூறப்படும் கடையொன்றில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பெரும் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, செப்டெம்பர் 25ஆம் திகதி அதிகாரிகள் குறித்த கடையில் சோதனை மேற்கொண்டு, நுகர்வோர் சட்ட மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயமற்ற விலை அறவீடுகள் உள்ளிட்ட முறைப்பாடுகளை 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.