
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்துள்ள ஊழல் வழக்கில், பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பை ஒக்டோபர் 8ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
செவனகல பகுதியில் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியிலிருந்த சொத்துக்களுக்கு, இழப்பீடு வழங்குவது நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், அரச அதிகாரிகளுக்கு செல்வாக்கு செலுத்தி ரூ. 8.85 மில்லியன் இழப்பீட்டைப் பெற்றதாக CIABOC குற்றஞ்சாட்டியுள்ளது.
சஷீந்திர ராஜபக்ஷ, செபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன், தற்போது பிணையில் உள்ளனர்.





.jpg)
.jpg)

.jpg)


.jpg)
