
தமிழ் மொழித் தினப் போட்டியின் தேசிய மட்டப் பாவோதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலய பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் சுரேஸ்குமார் சதுரிகன் இன்று (15.09.2026) சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலையில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு. க.கிருபாகரன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வில் வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவன் சுரேஸ்குமார் சதுரிகனைப் பாராட்டி கௌரவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் பலர் கலந்துகொண்டு மாணவனுக்குத் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.













.jpg)