அம்பாறை - மல்வத்தையில் இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு


(தில்சாத் பர்வீஸ்)


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் இரு பிள்ளைகளின் தாயான 54 வயதுடைய வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீலின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.