%20(1).jpg)
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான பாணகல உபதிஸ்ஸ தேரர், சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சௌத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கான கடிதம் இன்று திங்கட்கிழமை (28) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் கையளிக்கப்படவுள்ளது.
அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் அக் கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.
மதங்களுக்கு இடையிலான நல்லுறவு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பாணகல உபதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.





.jpg)

.jpg)
.jpg)


.jpg)
