பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு


நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

இன்று (16) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.