மாதம்பை - குளியாப்பிட்டி வீதியில் விபத்து : இரு சிறுவர்கள் பலி, தாய் படுகாயம்



மாதம்பை - குளியாப்பிட்டி வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாய் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தும்மலசூரிய, வீரகொடியான பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.