இந்த தகவலைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், தேசிய ஒஸ்கார் தெரிவுக் குழுவின் தலைவருமான சுடத் மஹாதிவுல்வெவ இன்று (28) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஒஸ்கார் அகாடமியின் புதிய நெறிமுறைகளின் கீழ், உள்ளூர் தெரிவுக் குழுவின் முறையான அனுமதி மற்றும் குழு உறுப்பினர்களின் தொழில்முறைத் தகுதிகளை மதிப்பீடு செய்து, முழுமையாக முறைமைப்படுத்தப்பட்ட வழிமுறையின் மூலம் இலங்கையிலிருந்து ஒஸ்காருக்கு அனுப்பப்படும் முதல் திரைப்படம் இதுவேயாகும்.
அசோக ஹந்தகம, ரவீந்திர குருதே, அனோமா இராஜகருணா, விசாகேச சந்திரசேகரம், திரைப்பட விமர்சகர் அருண குணரத்ன, இசையமைப்பாளர் லக்ஷ்மன் ஜோசப் டி சாரம் மற்றும் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் உதித லக்மால் கஹந்தவாராச்சி ஆகியோர் அடங்கிய மூத்த கலைஞர்களின் குழுவே இத்தேர்வை மேற்கொண்டுள்ளது.
தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு சஞ்சீவ புஷ்பகுமார தயாரித்து இயக்கிய விஹங்க பிரேமய, சத்ர வீரமன் இயக்கி யசஸ் ரத்நாயக்க தயாரித்த ஆயு , சமிந்த ஜயசூரிய இயக்கத்தில் சாந்த கீததேவ தயாரித்த ஃபாதர், சுகீர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோர் இயக்கிய அந்தோனி எனும் தமிழ் திரைப்படம், லலித் ரத்நாயக்க இயக்கத்தில் பிரபாத் ரோஷன் மற்றும் நிமந்தி பொரேஜ் தயாரித்த ரிவர்ஸ்டோன் மற்றும் தில்ஷார ஜயமான்ன இயக்கத்தில் ரசித ஜினசேன தயாரிப்பில் கிரிக்கெட் சாது ஆகிய 5 சிங்களத் திரைப்படங்களும் 1 தமிழ் மொழித் திரைப்படமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
ஒஸ்கார் அகாடமியின் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்ட 6 படங்களில் 4 படங்கள் தகுதிபெற்றன. இறுதிக்கட்டப் போட்டிக்கு 'ரிவர்ஸ்டோன்' மற்றும் 'ஃபாதர்' ஆகிய இரு திரைப்படங்கள் தெரிவாகி, இறுதியில் 'ரிவர்ஸ்டோன்' உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டது.


.jpg)



.jpg)
.jpg)

.jpg)


.jpg)
