சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகே விபத்து : பொலிஸ் உத்தியோகத்தர் பலி



பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் கடமையின் நிமித்தம் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி பொலிஸ் நிலையம் நோக்கி பயணித்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.