மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முன்னேற்றம்


2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 928 மாணவர்களில் 585 மாணவர்கள் (ஒவ்வொரு வினாத்தாளிலும் 35 புள்ளிகளுக்கு மேல்) 70 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று 63.04% சித்தி சதவீதத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும், 85 மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டில் 55.9% ஆக இருந்த வலயத்தின் சித்தி சதவீதம் இம்முறை 63.04% ஆக உயர்வடைந்துள்ளதுடன், மாகாண தரவரிசையில் 15ஆவது இடத்தில் இருந்து 13ஆவது இடத்திற்கும், தேசிய தரவரிசையில் 98ஆவது இடத்தில் இருந்து 95ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.