ஒக்டோபர், நவம்பரில் வெள்ள அபாயம் – முன்னெச்சரிக்கையாக இருக்க இலங்கைக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்படும் வானிலைச் செயற்பாடுகளுடன், இவ்விரு மாதங்களிலும் பொதுவாக வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால், மழையின் தீவிரத்தைப் பொறுத்து வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும். செப்டெம்பர் 28–29 முதல் பிற்பகல் இடியுடன் கூடிய மழையும் சில பகுதிகளில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
சில கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், அலைகள் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் கடலோர மக்கள் மற்றும் மீனவ, கடற்படை சமூகங்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




.jpg)




.jpg)

.jpg)

