.

Saturday, October 22, 2016

தென்கிழக்கின் திரவியமாம் திராய்க்கேணி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் திருத்தல வருடாந்த திருச்சடங்கு மகோற்சவம் - 2016

(திராயூர் தீப்ஷா) ஈழத்தின் தென்கிழக்கு கரையில், இயற்கை எழில் கொஞ்சும், இந்துக்களின் வரலாற்றுத் தொன்மைமிக்க புகழ்பூத்த தமிழ்க் கிராமம் திராய்க்கேணியாகும். இங்கு இயற்கையாக வந்துறைந்து வேண்டியோரின் வினையகற்றும் அன்னையாக, கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும், காவல் தெய்வம் ஆதிபராசக்தி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆகும். 
இவ் ஆலய வருடாந்த மகோற்சவமானது, ஆலய பரிபாலன சபைத்தலைவரும் இந்துமத அறங்காவலருமான திரு சின்னத்தம்பி கார்த்திகேசு அவர்களின் நெறிப்படுத்தலில், துர்முகி வருடம் 19.10.2016 (புதன்கிழமை) அன்று திதி சதுர்த்தி கார்த்திகை நட்சத்திரமும் வியாகபாதம் யோகமும் கூடிய சுபமுகூர்த்த சுபமாலை வேளையில் திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி 22.10.2016 (சனிக்கிழமை) அன்று காலை தீமிதிப்புடன் இனிதே நிறைவுற்றது.
உற்சவ கிரியாகால நிகழ்வுகளில், முதலாம் நாள் புதன்கிழமை சுபமாலை வேளை திருக்கதவு திறக்கப்பட்டு மண்டபம் காவல் பண்ணுதலோடு அபிஷேக ஆராதனைகளும் இடம்பெற்றன. மாலைப்பூசை அம்பிகை அடியார்களான அக்கரைப்பற்று மஞ்சுளா குடும்பத்தினரின் உபயத்தோடு இடம்பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள், காலை வேளையில் பெண்களின் பால்குட பவனியோடு ஆரம்பமாகியதோடு, மதியப்பூசையும் மதிய நேர அன்னதானமும், திராய்க்கேணியைச் சேர்ந்த உபய காரர்களும் ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் பக்தர்களுமான கார்த்திகேசு லீலாவதி குடும்பத்தினரின் அனுசரணையில் இடம்பெற்றன. அத்தோடு மாலைப் பூசையும் இரவு நேர அன்னதானமும், தம்பிலுவிலைச் சேர்ந்த இந்திரகுமார் சரோஜா முடும்பத்தினரின் உபயத்தோடு இடம்பெற்றது. 
மூன்றாம் நாளில் காரைதீவைச் சேர்ந்த உபயகாரர்களான நடேசபிள்ளை யமுனா குடும்பத்தினரின் பங்களிப்போடு நிழ்ந்த பகல் நவசக்தி கும்பபூசையினைத் தொடர்ந்து மாலை நெல்குற்றும் நிகழ்வுடன் தேவாதிகள் கன்னிமார் பிடிக்கும் வைபவமும் வினாயகர் பானையும் ஏற்றப்பட்டது. மாலைப்பூசை திராய்க்கேணியைச் சேர்ந்த லீலா குடும்பத்தினரின் உபயத்தோடு இடம்பெற்றதுடன், இரவில் தீக்குழியும் மூட்டப்பட்டது.
இறுதிநாள் நிகழ்வுகளாக அதிகாலை வேளையில் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று மஞ்சள் குளித்து திரும்பி வந்த அம்பிகை அடியார்கள் ஒருவர் பின் ஒருவராக தீக்குளிப்பு வைபவத்தில் பக்திப்பரவசத்தோடு கலந்து கொண்டனர். அதனைத்தொடாந்து இடம்பெற்ற வழிபாட்டுப்பூசை மற்றும் அன்னதானத்தோடு ஸ்ரீ முத்துமாரியம்மன் உற்சவம் இனிதே நிறைவுற்றது.
'அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்' 
Read more

15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு ! இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்

மட்டக்களப்பு, புன்னைச்சோலையில் 15 வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரை, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிதமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டார்.

சந்தேகநபரான புன்னைச்சோலைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார், நேற்று (21) ஆஜர் செய்யப்பட்ட போதே, நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

புனனைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் கடந்த வியாழக்கிழமை (20) கடத்திச் சென்று, துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சிறுமியை, மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்த பின்னர், சிறுவர் நன்னடைத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Read more

விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

(ஷமி.மண்டூர்) வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை மாலை(21) இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

றாணமடு மற்றும் கணேசபுர பிரதேசத்தை சேர்ந்த இரு நபர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்தாகவும்.படுகாயங்களுக்கு உள்ளான றாணமடு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப்பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.


Read more

மட்டக்களப்பு நகரின் சில பகுதிகளில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடு ! உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவு

மட்டக்களப்பு நகரின் சில பகுதிகளில் சலூன் என்ற போர்வையில் பாடசாலை மாணவிகளை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் , மாணவர்கள் , பெற்றோர்கள் இதனால் விசனமடைந்து இருப்பதாகவும் நீதிமன்றுக்கு கிடைக்கபெற்ற  முறைப்பாடுகளையடுத்து ,

இவ்வாறான  கலாசார சீரழிவுக்கு இடமளிக்கும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவுவிட்டுள்ளார்

இவ்வாறன கலாச்சார சீரழிவு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்படப்  வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .


Read more

கிழக்கு மாகாண தமிழ்பேசும் பாடசாலைகளில் தமிழ்மொழி வாழ்த்து பாடப்படவேண்டும். - ச.வியாழேந்திரன்

(படுவான்  பாலகன்) கிழக்கு மாகாணப்பாடசாலைகளிலே உள்ள தமிழ்மொழிபேசும் பாடசாலைகளில் தமிழ்மொழி வாழ்த்துக்கள் ஒவ்வொரு பாடசாலை நடைபெறும் தினங்களிலும் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் அல்லது முடிவுறும் நேரத்தில் பாடப்பட வேண்டும் இதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சும், பணிப்பாளரும் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
Read more

சமாதானம் சகவாழ்விற்காக யப்பானிய பௌத்த துறவிகளும் இந்தியாவின் காந்தி அமைப்பினரும் இணைந்து பாத யாத்திரை

(செ.துஜியந்தன்)
சமாதானத்தையும் சகவாழ்வின் தேவையையும் இலங்கை மக்களுக்கு உணர்த்துவதற்கான யப்பானிய பௌத்த துறவிகளும் இந்தியாவின் காந்தி அமைப்பினரும் இணைந்து அக்டோபர் மாதம் 14ம் திகதி ஆரம்பித்த சர்வமத சமாதான பாதயாத்திரை (22ஆம் திகதி ) மட்டக்களப்​பை வந்தடைந்தது
 
1986ல் சமாதான பாதயாத்திரை வந்த யப்பானிய பெளத்த பிக்கு யொக்கோடசுகா யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் சமாதான நடவடிக்கையை  முன்கொண்டு செல்வதற்காகவும் சமாதானம், சகவாழ்வு மற்றும் உலக சமாதானத்தை வலியுறுத்தியும் இச் சமாதான பாதயாத்திரை இங்கு நடைபெற்று வருகின்றது. 
Read more

Friday, October 21, 2016

பச்சை இலைக்கறி வகைகளில்தான் நச்சுத் தன்மை இல்லை - விவசாய போதனாசிரியர் எழில்மதி

[ ரவிப்ரியா ]
மண்முனை தென் எருலில் பிரதெச செயலகப் பிரிவில் 45 கிராமசேவகர் பிரிவுகளிலம், வீட்டுத்தோட்ட விழிப்பணர்வு செயலமர்வு நடைபெற்று வருகின்றது. அதில் 2250 பயனாளிகள் இணைந்துள்ளனர்  அதன் தொடர்ச்சியாக பெரியகல்லாற்றில் இடம்பெற்ற கருத்தரங்கில் விவசாய போதனாசிரியை ஏ.எழில்மதி பெரியகல்லாறு கிராமசேவகர் பிரிவுகளின் பயனாளிகளக்கு விளக்கமளித்தார்.
Read more

பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலய வளாகத்தில் திரு திருமதி பாக்கியராஜா நினைவாக சிறுவர் பூங்கா கையளிப்பு

[ ரவிப்ரியா ]          
பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலய வளாகத்தில் திரு திருமதி டானியல் பாக்கியராஜா நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட  சிறுவர் பூங்கா கையளிக்கும் நிகழ்வு ஆலய போதகர் வண எஸ்.சசிகுமார் அவர்களின்
Read more

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வுகள் இன்று(21) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்னம் ஒழுங்கமைப்பில், மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் புரட்சிக்கமால் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பரதம், நாட்டார் இசை, வசந்தன் கூத்து, றபான் புத்தாக்க நடனம், காவடி நடனம், கபரிஞ்சா நடனம், ஆகுதி நாடகம், கிராமிய நடனம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் சிறப்பு விருத்தினர்கள், கலை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலக்கிய விழாவின் இறுதிநாள் நிகழ்வு நாளை(22) சனிக்கிழமை மாலை 03மணிக்கு நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Read more

கனடா பாடும் மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் புதிய வீடுகள் கையளிப்பு

(எஸ்.சதீஸ்)
கனடா பாடும் மீன்கள்  அமைப்பினரால்   மட்டக்களப்பு மாவட்டத்தின்   பெரிய புல்லுமலை கிராமத்தில் மீள் குடியேறிய வறுமை நிலையில் வாழும்    ஐந்து குடும்பங்களுக்கு 2.9 மில்லியன் ரூபா செலவில்   ஐந்து வீடுகளும்,  அக் கிராமத்திற்கு தபால் நிலையம், கிராமசேவையாளர் அலுவலகம் என்பன நிர்மாணிக்கப்பட்டு    கடந்த    24ஆம் திகதி வீடுகள் அணைத்தும் மக்கள் பாவனைக்காக கனடா பாடும் மீன்கள்  அமைப்பினரால் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சமூக ஆர்வலர் தம்பிராஜா பாபு வசந்தகுமார் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வீடுகளை திறந்துவைத்தனர்.

Read more

வாகரை மற்றும் கதிரவெளி பொது நூலகங்களில் தொழில்நுட்பத்தின் ஊடாக வாசிப்புத்திறனை மேம்படுத்தல் செயலமர்வு


(ஜெ.ஜெய்ஷிகன்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாகரைப் பிரதேசசபையின் கீழ் இயங்கும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு நிலையங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக வாகரை வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் வாகரை மற்றும் கதிரவெளி பொது நூலகங்களில் தொழில்நுட்பத்தின் ஊடாக வாசிப்புத்திறனை எவ்வாறு மேம்படுதலாம் என்ற தலைப்பின் கீழ் வாகரை, பால்சேனை, கதிரவெளி ஆகிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான  செயலமர்வு நூலகப் பொறுப்பாளர்களின் தலைமையில் இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரூன், வேள்ட்விஷன் நிறுவனத்தின் கல்விப்பிரிவுக்குப் பொறுப்பான திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜன், வாகரை பிரதேசசபை நிதி உதவியாளர் ஜெயரூபன் ஆகியோருடன் வளவாளராக வேள்ட்விஷன் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ரமிஸ்டன் உளவள ஆலோசனை வைத்தியர் ஜுடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கருத்தரங்;கின் மூலம் மாணவர்கள் தமது கல்வித் தேடலில் எவ்வாறு இணையத்தினை பயன்படுத்தலாம் என்ற அறிவினையும் தகவல் தொடர்பாடல் நுட்பங்களினையும் அறிந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு பிரதான அனுசணையை வேல்ட்விஷன் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

Read more

வாகரைப் பொது நூலகத்தில் உலவள ஆலோசனை செயலமர்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
ஒக்டோபர் 2016 தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாகரைப் பிரதேசசபையின் கீழ் இயங்கும் வாகரை, கதிரவெளி, வட்டவான் ஆகிய நூலகங்களில் தெளிவான வாசிப்பு வளமான சமூகத்தின் முன்னோடி எனும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
அதன் ஓர் அங்கமாக வாகரைப் பிரதேசத்தில் எழுத்தறிவு வீதம் குறைவாக காணப்படும் பிள்ளைகளின் பெற்றோருக்கான உளவள ஆலோசனை செயலமர்வு வாகரைப் பொது நூலகத்தில் நூலகப்பொறுப்பாளரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வாகரைப் பிரதேசசபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரூன் மற்றும் வளவாளராக சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் புவனேந்திரன் வாகரைப் பிரதேச செயலக சமூக சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். 
Read more

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மர்ம மரணம் ; ஐந்து போலிசார் கைது


இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து போலிசார் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. இச்சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பொலிசார் ( சி.ஐ.டி) விசாரணைகளை தொடங்கியுள்ளதாகவும் அரசின் தகவல் திணைக்கள அறிக்கையொன்று கூறுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அரசறிவியல் பீட மாணவன் நடராஜா கஜன் (23), ஊடகக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த மாணவன் பவுண்ராஜ் சுலக்ஷன் (24) ஆகிய இருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.
விபத்து காரணமாகவே மரணம் ஏற்பட்டதாகக் காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஆனால் பின்னர் அரசின் தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில்,இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக அந்த அறிக்கை கூறியது.

போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணம் ?
ஆயினும் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக களமிறக்கப்பட்டுள்ள விசேட காவல்துறையின் அணியொன்று இந்த விபத்து நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற இடத்தில் கடமையில் இருந்ததாகவும், விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நேரம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி செய்த சைகையை மீறிச் சென்றதனால், காவல் துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனால் தடம் மாறிய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி சகிதம் சென்ற யாழ் மாவட்ட நீதவான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் உயர் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பதட்டத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் குழுமியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ததேகூ அறிக்கை
இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் பற்றி இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து தனது கவலையை தெரிவித்தாகவும், இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார் என்று கூறியது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றும் கூட்டமைப்பின் அறிக்கை கூறியது.
இது குறித்து பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரை கோரியது.
Read more