கிழக்கு பல்கலைகழகத்திற்கு 2013/2014 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (27) திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு கிழக்கு பல்கலைகழக நல்லையா மண்டபத்தில்; நடைபெற்று. கலைகலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவப் பீடம், விவசாயப் பீடம், விஞ்ஞான பீடம் ஆகிய பீடங்களிலுள்ள மாணவர்கள் வரவேற்க்கப்பட்டதுடன் வரவேற்பு நடனம் மாணவ தலைவர்களின் அறிவுரை என்பனவும் நடைபெற்றது.
பல்கலைகழக பீடாதிபதிகள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரைவுரையாளர்கள் மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்ததுடன் துறைசார்ந்த விரிவுரையாளர்களின் அறிமுகவுரைகளும் இடம்பெற்றது. கடந்த வருடங்களில் கிழக்கு பல்கலைகழகத்திற்கு தெரிவாகிவருகின்ற முதலாம் வருட மாணவர்களை பல்கலைகழக பீடங்களினால் வரவேற்க்கப்பட்டிருந்தன. இம்முறை பீடங்கள் மற்றும் சிரேஸ்ட மாணவர்களினாலும் வரவேற்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


