'ஐஸ்' போதைப்பொருளுடன் பெண் கைது!


 கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கொச்சிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 340 கிராம் 170 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் வத்தளை பகுதியைச் சேர்ந்த, 51 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.