மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை நிறுவுவதற்கான பணிகள் தீவிரம் - ஹர்ஷன நாணயக்கார


மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை நிறுவ உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் குழுவின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர், மேலும் கூறுகையில்,

இந்த பணிகளை மேற்கொள்வதற்கு சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.

இது எவ்வகையிலும் எளிமையான காரியம் அல்ல. ஆனால் செய்யவேண்டிய ஒரு விடயம். இதற்கு சில காலம் எடுக்கும். இதனைச் சரியான முறையில் செய்யவேண்டும் என்பதனாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.