
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது. அவரின் நடத்தைகள் பற்றி அனைவரும் அறிவர் என்பதால், அவர் கூறும் விடயங்களை எவரும் கவனத்தில் கொள்வதில்லை என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (19) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தைகள் தொடர்பில் அனைவரும் அறிவர். எனவே அவரால் கூறப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பதற்றமடையத் தேவையில்லை. அவர் கூறுவதை எவரும் கவனத்தில் எடுப்பதுமில்லை.
அவரால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் முக்கியத்துமுடையவையல்ல. அவை அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது. மக்களும் பதற்றமடைய மாட்டார்கள். அவர்கள் அவற்றை அங்கீகரிக்கப் போவதுமில்லை என்றார்.










.jpeg)

