
சுங்க வரி செலுத்தாது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான 300க்கும் மேற்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தக வளாகத்தின் இரகசிய களஞ்சியசாலை ஒன்றில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் காலை இந்தச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வெவ்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட நவீன கையடக்கத் தொலைப்பேசிகள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் மேற்பார்வையில் இந்த நடவடிக் எடுக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இவற்றை நாட்டிற்குள் கொண்டுவந்த நபர்களைக் கண்டறிய வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் சுங்கத் திணைக்களத்தினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









.jpg)



