பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீதான மக்களின் நம்பிக்கை 75 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
மொத்த சனத்தொகையில் 22 மில்லியன் மக்கள் உள்ள நிலையில் 1240 பேரை மாத்திரம் எழுமாற்றாகக் கொண்டு அந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசியமயப்படுத்தப்பட்ட ஒரு விடயத்தை எவ்வாறு 1240 பேருக்குள் மாத்திரம் வரையறுக்க முடியும்.
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 42 சதவீத வாக்குகளைப் பெற்றார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 62 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 43 சதவீத வாக்குகளையேப் பெற்றது.
ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்தில் அரசாங்கத்தின் வாக்குவங்கி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.இவ்வாறான பின்னணியில் தான் மாற்றுக்கொள்கைக்கான கேந்திர மையம் ஜனாதிபதி மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு என்று ஒட்டுமொத்த மக்களும் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் இந்த அமைப்பு எவ்வாறு எதிர்மறையான வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது நகைப்புக்குரியதாக காணப்படுகிறது.
அறிக்கை வெளியிட்டு ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மாற்றுக்கொள்கைக்கான கேந்திர மையம் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும். அப்போது உண்மையான பெறுபேறு வெளியாகும். மக்களும் சிறந்த முறையில் தீர்மானத்தை எடுப்பார்கள் என்றார்.



.jpg)










.jpg)