உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்


அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை விரிவாகப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர்கள் குழு ஒன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.