செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து காயம்!



அம்பேவெலை பகுதியில் இன்று (19) காலை, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலைநாட்டு ரயில் பாதையில் பயணம் செய்யும் போது ஓடும் ரயிலின் கதவுகள் அல்லது ஜன்னல்களில் இருந்து வெளியே சாய்ந்து செல்ஃபி எடுப்பது உயிருக்கு ஆபத்தானது என்பதால், அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.